Saturday, May 30, 2009

மதம் கொன்ற மானுடம்...

முதன் முதலாய் எழுதிய முழுக்கவிதை இதுதான்..
"மதம் கொன்ற மானுடம்..."


எழுதினேன் எழுதினேன்...
வார்த்தைகள் வழுக்கின...
வெட்டினேன் கசக்கினேன்
ஒற்றைகள் ஒழிந்தன - குப்பை
கூடைகள் கனந்தன...

என் பேனாப்பெண் கேட்டாள்...
"மானுடத்தின் விலை
கிலோ எவ்வளவு?"

தெரியவில்லை - உங்களிற்கு
தெரியுமா?

மரணங்கள் மலிந்துவிட்ட
கறைபடிந்த களமிதில்,
மானுடத்தின் விலை
கிலோ எவ்வளவு?

இது மதங்களின் தேசம்தான் - ஆனால்
மானுடத்தின் தேசம் அல்ல - நிச்சயமாக
இது மதம் "கொண்ட" தேசம் - அதனால்தான்
மானுடம் "கொன்ற" தேசமாகிவிட்டது...

மனிதன் தழைக்க வந்த
மதங்களே இன்று களைகளாக
மாறிவிட்ட காலமிது.
பிணமதை எரித்து - இங்கு
மதமது குளிர் காய்கிறது.

இயேசுவே!
சிலுவையில் மானுடத்தை
மரிக்க விட்டு நீர் மட்டும்
ஏன் மீண்டு வந்தீர்?

கௌதம புத்தரே!
பரி நிர்வாணத்தில் மானுடத்தை
மரிக்கச் செய்தீரா?

நபிகளே!
புனிதப் போரில் - உங்கள்
குதிரைக் குழம்புகளில் சிக்கி
மானுடம் சின்னாபின்னமாகி விட்டதா?

கிருஷ்ணா!
நிராயுதபாணியை ஆயுதத்தால்
தாக்கச் சொன்ன நீசனே..
நீயும் ஒரு கடவுளா?

இலக்கங்களுக்கு பின்னால்
பூச்சியங்களை இலட்சியங்களாக்கி
இலட்சங்களை கொட்டி
பலதரம் போய் வருவீர்
மதயாத்திரைகள் - ஆனால்
பக்கத்து வீட்டுக்காரன்
படுத்த படுக்கையாய்
சாகக்கிடக்கிறானே.. - சாட்டுக்காயினும்
அவனை நினைத்தாவது பார்த்தாயா?

அடுத்தவன் இறப்பையே விளம்பரமாக்கும் உங்களைவிட
தெருக்கோடி நாய்கள் மேல்...

2 comments:

  1. மனச என்னவோ பண்னுதுங்க.. உங்க கவிதை!
    புதுசா நீங்க? பழய ஆள் போல, அசால்டா கவித
    வருதே! வார்தைகள் விளையாடுதே!!

    டைம் இருந்தா அப்படியே நம்ம பக்கங்களுக்கும் வாங்க..
    உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...
    www.kalakalkalai.blogspot.com

    ReplyDelete
  2. நன்றி கலையரசன். அதிகம் நூல்களை(கதைகள், கட்டுரைகள்) வாசிப்பதை தவிர எழுவது எல்லாம் எனக்கு புதிய அனுபவம்தான்.

    ReplyDelete